மூன்று காமிரா, பாப்அப் செல்ஃபி காமிரா: ஃபோவாய் ஒய்9 பிரைம் அறிமுகம்

Huawei Y9 Prime 2019 smartphone Launched in India

ஃபோவாய் நிறுவனம் ஆப்போ கே3 மற்றும் ரியல்மி எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக ஃபோவாய் ஒய்9 பிரைம் 2019 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது உலக அளவில் மே மாதம் அறிமுகமானது. இந்தியாவில் ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் விற்பனைக்கு வர உள்ளது.

ஃபோவாய் ஒய்9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

சிம் கார்டு : நானோ இரண்டு சிம் கார்டுகள்

தொடுதிரை: 6.59 அங்குலம்; எஃப்ஹெச்டி; 1080X2340 தரம்; டிஎஃப்டி திரை

இயக்கவேகம்: 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 512 ஜிபி வரை அதிகரிக்கலாம்)

பின்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல் கொண்ட முதன்மை காமிரா; 8 எம்பி ஆற்றல் கொண்ட அகலகோண லென்ஸ் காமிரா; 2 எம்பி ஆற்றல் கொண்ட காமிரா. ஆக மொத்தம் மூன்று காமிராக்கள்

முன்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல் கொண்ட பாப்அப் தற்பட (செல்ஃபி) காமிரா

மின்கலம்: 4,000 mAh மின்தேக்க ஆற்றல்

பிராசஸர்: ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 710 சிப் ஆன் சிஸ்டம்

இயங்குதளம் : ஆண்ட்ராய்டு பை ( EMUI 9.1)
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்ட காமிரா செயலி ஒன்றும் இதில் உள்ளது பின் பக்க காமிராவை கொண்டு 22 வகையான 500க்கும் மேற்பட்ட காட்சிகளை இதனால் அங்கீகரிக்க இயலும். பின்பக்க மற்றும் முன்பக்க காமிராக்களால் எடுக்கப்படும் புகைப்படங்களை மெருகூட்டக்கூடிய முப்பரிமாண ரீடச் அம்சமும் கொண்டது.

ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நண்பகல் 12 மணி முதல் அமேசான் தளத்தின் பிரைம் வகை வாடிக்கையாளர்களும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நண்பகல் 12 முதல் அனைத்து வாடிக்கையாளர்களும் அமேசான் தளத்தில் ரூ.15,990 விலையில் இதை வாங்கலாம்.
அமேசான் பே பயனர்களுக்கு ரூ.500 கேஷ்பேக் சலுகையும் ஸ்டேட் வங்கி அட்டை வைத்திருப்போருக்கு 10 விழுக்காடு தள்ளுபடியும் உண்டு. கூடுதலாக எக்சேஞ்ச் தள்ளுபடி ரூ.1,500 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading மூன்று காமிரா, பாப்அப் செல்ஃபி காமிரா: ஃபோவாய் ஒய்9 பிரைம் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்னை: தெரிந்து கொள்ள வேண்டியவை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்