அசோக சக்கரம் இமோஜி ட்விட்டரில் அறிமுகம்

Independence day special: Ashoka Chakra emoji launched by twitter

சமூக ஊடகமான ட்விட்டர் இந்தியாவின் தேசிய சின்னங்களுள் ஒன்றான அசோக சக்கரத்தின் இமோஜியை புழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது 73வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அதை முன்னிட்டு இந்த இமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசோகரின் தர்ம சக்கரம் என்று கூறப்படும் 24 ஆரங்கள் கொண்ட சக்கரம் இந்திய தேசிய கொடியில் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே செங்கோட்டை, இந்திய தேசிய கொடி உள்ளிட்ட சுதந்திர தினத்திற்கான நான்கு இமோஜிக்கள் ட்விட்டரில் உள்ளன. அசோக சக்கரம் இவ்வகையில் ஐந்தாவதாகும்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அசோக சக்கர இமோஜி உள்ளது. இந்த இமோஜியை ஆகஸ்ட் 18ம் தேதி வரைக்கும் பயன்படுத்தலாம்.

You'r reading அசோக சக்கரம் இமோஜி ட்விட்டரில் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது அறிவிப்பு; நாளை சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்