மோட்டோரோலா ஒன் ஆக்சன்: ஆகஸ்ட் 30 முதல் விற்பனை

Motorola One Action launched in India

டெனிம் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் மோட்டோரோலா ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதனை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

தொடுதிரை: 6.3 அங்குலம் எஃப்டிஹெச் + சினிமாவிஷன்; விகிதாச்சாரம் 21:9

இயக்க வேகம்: 4 ஜிபி RAM

சேமிப்பளவு: 128 ஜிபி

முன்பக்க காமிரா: 12 எம்பி ஆற்றல்

பின்பக்க காமிரா: 16 எம்பி ஆற்றல் (அல்ட்ரா வைட்), 12 எம்பி மற்றும் 5 எம்பி ஆற்றல் கொண்ட மூன்று காமிராக்கள்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9; சிப்செட் எக்ஸிநாஸ் 9609

மின்கலம்: 3,500 mAh (10W வேகமான மின்னேற்ற வசதி)
இடப்பக்கம் மேலே பஞ்ச்ஹோல் காமிரா மற்றும் பின்பக்கம் விரல்ரேகை உணரி (ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்) கொண்ட ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You'r reading மோட்டோரோலா ஒன் ஆக்சன்: ஆகஸ்ட் 30 முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 2020 சம்மரிலே சரவெடி; தளபதி 64 மாஸ் அப்டேட்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்