டேட்டிங் செயலிகளுக்குத் தடை

Ban on dating processors

டின்டர், கிரிண்டர், டேக்ட், ஸ்கோட், சேஹய் போன்ற செயலிகள், அநாகரிகமானவை என்று பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன. டேட்டிங் சேவையை நீக்குமாறும், நாட்டுச் சட்டங்களுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை மாற்றியமைக்குமாறும் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அனுப்பிய எச்சரிக்கை கடிதத்திற்கு இந்நிறுவனங்கள் பதில் அளிக்காததால் இவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனங்கள் பாகிஸ்தானின் சட்டதிட்டங்களைக் கைக்கொள்ளுவதாக உறுதியளித்தால் தடையை மறுபரிசீலனை செய்வதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
பைட்ஸ் ஃபார் ஆல் என்ற டிஜிட்டல் உரிமை குழுவின் இயக்குநர் ஷாஸட் அஹமது, தொலைத்தொடர்பு ஆணையத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அநாகரிகமான காட்சிகள் மற்றும் வெறுப்பு உரைகளை நீக்குமாறு கடந்த மாதம் யூடியூப் நிறுவனத்துக்கு ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. ஜூலை மாதம் இதேபோன்ற எச்சரிக்கையைப் பாகிஸ்தான் ஆணையம் டிக்டாக் செயலிக்கு விடுத்தது. அந்நிறுவனத்தின் சார்பில் பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து டிக்டாக் தன் சமுதாய வழிகாட்டுதல்களை உருது மொழியிலும் அளித்தது. அதிகமாக வீடியோக்களை நீக்கிய ஐந்து நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்றும் டிக்டாக் தெரிவித்துள்ளது.

You'r reading டேட்டிங் செயலிகளுக்குத் தடை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா உயிரிழப்பில் 69 சதவீதம் பேர் ஆண்கள்.. ஆய்வில் தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்