யுவர் போன் செயலியில் புதிய அம்சம்: மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது

New feature in Your Phone processor Microsoft has introduced

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், யுவர் போன் செயலியில் 'சென்ட் ஃப்ரம் போன்' என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில் உங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து நீங்கள் அனுப்பிய இணைப்புகள் (லிங்க்), படங்கள் (இமேஜ்) மற்றும் குறிப்புகளை (நோட்ஸ்) ஆகியவற்றின் விவரங்களை காண முடியும்.

விண்டோஸ் 10 இன்சைடரில் இந்தப் புதிய அம்சம் செயல்பட ஆரம்பித்துள்ளது என்று எக்ஸ்டிஏ டெவலப்பர் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இவ்வசதி மூலம் பயனர்கள் ஷேர் பட்டனை அழுத்திய பிறகு, 'யுவர் போன் கம்பேனியன் ஆப்' என்பதை தெரிவு செய்து எளிதாக லிங்க், இமேஜ் மற்றும் நோட்ஸ்களை மற்றவர்களுடன் பகிர முடியும். கோப்புகளை பகிரக்கூடிய (ஃபைல் ஷேரிங்) வசதி இனிமேல் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரப்பட்ட லிங்க், இமேஜ், நோட்ஸ் இவற்றின் விவரங்கள் செயலியில் காண கிடைக்கும். யுவர் போன் செயலியின் 1.20091.79.0 வடிவத்தை உபயோகிக்கும் சில பயனர்களால் 'சென்ட் ஃப்ரம் போன்' வசதியை பயன்படுத்த முடிகிறது. யுவர் போன் செயலியின் வடிவமைப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சில மாறுதல்களை செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.

You'r reading யுவர் போன் செயலியில் புதிய அம்சம்: மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல இயக்குனர் மீது தமிழ் நடிகை பாலியல் புகார் கூறியதால் பரபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்