துல்லியமாக புகைப்படம் எடுக்க கூகுளின் நைட் மோட் அறிமுகம்.

Introducing Googles Night Mode for accurate photography

குறைந்த வெளிச்சத்தில் கூகுள் காமிரா கோ செயலி மூலம் புகைப்படம் எடுக்கும்போது துல்லியமாக அமைவதற்கு நைட் மோட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

"குறைந்த வெளிச்சம், காமிரா, ஆக்சன்! எந்த நேரமானாலும் காமிரா கோவில் நைட் மோட் உடன் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உயர்தரமான புகைப்படங்கள் எடுங்கள்" என்று கூகுள் நிறுவனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த காமிரா செயலி, மென்பொருள் மற்றும் ஹார்ட்வேர் இணைந்து செயல்படுவதாகும். குறிப்பிட்ட காமிராக்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

நோக்கியா 1.3, விகோ ஒய்61, விகோ ஒய்81 ஆகிய ஸ்மார்ட்போன்களில் காமிரா கோ செயல்படும். குறைந்த விலை ஸ்மார்ட்போன்களான இவற்றிற்கான காமிரா கோ செயலியில் இந்த ஆண்டு இறுதியில் எச்டிஆர் செயல்பாடும் வழங்கப்படும்.

You'r reading துல்லியமாக புகைப்படம் எடுக்க கூகுளின் நைட் மோட் அறிமுகம். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈறுகளில் இரத்தக் கசிவு, உடல் அசதி, எளிதில் காயம் ஏற்படுகிறதா? இவற்றை சாப்பிடலாம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்