கூகுளுடன் போட்டியா? பெயரை மாற்றிய பெரிய நிறுவனம்..!

Compete with Google? The big company that changed the name

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன் தேடுபொறியான 'பிங்க்'கின் பெயரை 'மைக்ரோசாஃப்ட் பிங்க்' என்று மாற்றியுள்ளது. 'பிங்க்' தேடுபொறியைப் பயன்படுத்தும்போது மைக்ரோசாஃப்ட் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த தேடுதல் அனுபவம் கிடைக்கும். தற்போது கூகுளின் தேடுபொறியே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஜூன் மாதம் வரையிலான நெட்மார்க்கெட் ஷேர் கணக்குப்படி சந்தையில் ஏறத்தாழ 84 சதவீதத்தைக் கூகுள் பிடித்துள்ளது. பிங்க் தேடுபொறி 6 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. 'பிங்க்' என்பதைக் காட்டிலும் 'மைக்ரோசாஃப்ட்' என்பது பெரிய வணிக நிறுவனம் என்ற உணர்வைத் தரும்.

ஆபீஸ் 365 என்பது மைக்ரோசாஃப்ட் 365 என்றும், விண்டோஸ் டிஃபெண்டர் என்பது மைக்ரோசாஃப்ட் டிஃபெண்டர் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.ஆண்ட்ராய்டு செயலிக்கான அவுட்லுக்கையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களில் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் நிறுவியுள்ளவர்கள் அதில் குறிப்பிட்ட வார்த்தை அல்லது பத்தியைத் தெரிவு செய்தால் 'பிங்க்' மூலம் தேடக்கூடிய புதிய வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

You'r reading கூகுளுடன் போட்டியா? பெயரை மாற்றிய பெரிய நிறுவனம்..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காங்கிரஸ் கட்சியில் நிம்மதியாக இருக்கிறேன் வேறு எந்த கட்சியிலும் சேர மாட்டேன் நடிகை குஷ்பு அறிவிப்பு..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்