இந்த கேமிங் ஆப்களை டவுண்லோட் செய்யாதீர்கள்...!

Do not download these gaming apps

ஸ்மார்ட் போனில் கேம் விளையாடினால் நேரம் போவதே தெரிவதில்லை. மொபைல் கேம் விளையாடாதவர்களே இல்லை என்று கூறுமளவுக்குப் பெரும்பான்மையானோர் கேம் விளையாடுகின்றனர். மொபைல் போன் கேம் பிரியர்களைக் குறிவைத்துப் பல போலி கேமிங் செயலிகள் செயல்படுவதாக டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

விளம்பரங்களை அள்ளிக் கொட்டும் (adware) போலி கேமிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பதாகவும் அவற்றைக் குறித்து கூகுள் நிறுவனத்திற்குப் புகார் அனுப்பியுள்ளதாகவும் அவாஸ்ட் (Avast) என்ற இணையப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. மொத்தம் 21 செயலிகளை விளம்பரம் சார்ந்தவையாக அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றுள் 19 செயலிகள் இன்னமும் கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யக் கிடைப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயனர்கள் தங்கள் திறன்பேசிகளில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் முன்னர் அந்த செயலிகளைப் பற்றிய பரிந்துரைகள் மற்றும் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றைக் கவனித்தால் போலி செயலிகளைக் கண்டு பிடிக்கலாம் என்றும் அவாஸ்ட் நிறுவனத்தின் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் வித்தியாசமான கேமிங் செயலி என்று விளம்பரம் செய்யப்படும் இவற்றைப் பதிவிறக்கம் செய்தால் அவை முற்றிலும் வேறு வகையில் செயல்படுகின்றன என்று பயனர்கள் பின்னூட்டங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். இவற்றை இன்ஸ்டால் செய்ததும் போனில் விளம்பரங்களாக வந்து கொட்டுகின்றன என்று கூறப்படுகிறது.

Shoot Them, Crush Car, Rolling Scroll, Helicopter Attack - NEW, Assassin Legend - 2020 NEW, Helicopter Shoot, Rugby Pass, Flying Skateboard, Iron என்பன உள்ளிட்ட 21 செயலிகள், போலி கேமிங் செயலிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை இதுவரைக்கும் 80 லட்சம் முறை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

You'r reading இந்த கேமிங் ஆப்களை டவுண்லோட் செய்யாதீர்கள்...! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனவெறிக்கு எதிராக குரல்... ஐபிஎல் களத்தில் கவனம் ஈர்த்த ஹர்டிக் பாண்டியா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்