மெமரியை ஆக்ரமிக்கும் மெசேஜ்களை அழிக்க வாட்ஸ்அப்பில் புதிய வசதி

வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள செயலிதான். எப்போதும் வாட்ஸ்அப்பை பார்த்துக்கொண்டே இருப்பது பலருக்கு வழக்கம். வாட்ஸ்அப்பில் இருக்கும் ஒரு தொல்லை, அதில் வந்து குவியும் செய்திகளால் ஸ்மார்ட்போனின் மெமரி நிறைந்துபோகிறது என்பது தான்.

தேவையற்ற செய்திகளை நீக்குவதற்கு வாட்ஸ்அப் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்கிறது. செய்திகளை எளிதாக அடையாளம் கண்டு, பரிசீலித்து, மொத்தமாக அழிப்பதற்கு இவ்வசதி உதவும். அதன் மூலம் போனின் சேமிப்பளவை தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும். பலமுறை பகிரப்படும் தேவையற்ற செய்திகளை அழிப்பதன் மூலம் தேவைக்கு ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தை போதுமான சேமிப்பளவுடன் வைத்துக்கொள்ளலாம். இப்புதிய வசதி உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வந்ததும் வாட்ஸ்அப்பில் செட்டிங்க்ஸ்>ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா>மேனேஜ் ஸ்டோரேஜ் (Settings > Storage and data > Manage storage) என்ற வழியில் இதை பயன்படுத்தலாம்.

முன்பு ஸ்டோரேஜ் யூசேஜ்-ல் சாட் என்னும் அரட்டையில் வரும் செய்திகள் மட்டுமே காட்டப்படும். புதிய வசதியில் வாட்ஸ்அப் மீடியா ஃபைல்களால் எவ்வளவு மெமரி நிறைந்துள்ளது என்பதை பார்க்கலாம். வேறு எந்த செயலிகள் எவ்வளவு மெமரியை பயன்படுத்தியுள்ளன என்பதும் தெரியும். பலமுறை ஃபார்வேர்ட் செய்யப்பட்டுள்ள மீடியா ஃபைல்களையும் பார்க்க முடியும். இதன் மூலம் எளிதாக தேவையற்ற செய்திகளை அடையாளம் காணலாம். 5எம்பி அளவுக்கு மேற்பட்ட பெரிய ஃபைல்களையும் இப்புதிய வசதி குறிப்பிட்டு காட்டும். அழிப்பதற்கு முன்பு ஃபைல்களை அவற்றின் அளவை கொண்டு பிரித்து பரிசீலித்துக் கொள்ளவும் இவ்வசதி வழிசெய்கிறது.

You'r reading மெமரியை ஆக்ரமிக்கும் மெசேஜ்களை அழிக்க வாட்ஸ்அப்பில் புதிய வசதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கணவனின் சந்தேகத்தால் மனம் உடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்