ட்ரிபிள் த்ரீ காமிராவுடன் மோட்டோ ஜி 5ஜி நவம்பர் 30ல் அறிமுகம்

லெனோவா நிறுவனத்தின் மோட்டோரோலா ஜி வரிசை ஸ்மார்ட்போன்களில் மோட்டோ ஜி 5ஜி போனை நவம்பர் 30ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இதை வாங்க முடியும்.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

சிம்: இரட்டை சிம்
தொடுதிரை: 6.7 அங்குலம் எஃப்எச்டி+ (1080 X 2400 பிக்ஸல் தரம்)
இயக்கவேகம்: 4 ஜிபி மற்றும் 6 ஜிபி
சேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (1 டிபி வரை அதிகரிக்கும் வசதி)
முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல் செல்ஃபி காமிரா
பின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி+ 2 எம்பி (மூன்று காமிரா)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 750ஜி; அட்ரினோ 619 ஜிபியூ
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; MY UX
மின்கலம்: 5000 mAh

இதன் விலை ரூ.26,300/- அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் என்று உத்தேசிக்கப்படுகிறது.

You'r reading ட்ரிபிள் த்ரீ காமிராவுடன் மோட்டோ ஜி 5ஜி நவம்பர் 30ல் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எடையை குறைக்கணும்னு ட்ரை பண்றீங்களா? படுக்கிறது முன்னால இதை குடிங்க!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்