மியூசிக் ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஸ்மார்ட் வாட்ச்: முன் பதிவு நடக்கிறது

சீனாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கனவே அறிமுகமான அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட் வாட்ச் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அமேஸ்ஃபிட் (Amazfit) இணையதளத்தில் இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. முன்பதிவு செய்வோருக்கு டிசம்பர் 21ம் தேதி முதல் வாட்ச் அனுப்பி வைக்கப்படும் என்று ஹூவாமி நிறுவனம் அறிவித்துள்ளது. ஹூவாமி, சோமி நிறுவனத்தின் துணை அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 சிறப்பம்சங்கள்:

1.65 அங்குல செவ்வக வடிவிலான AMOLED திரையானது 341 பிபிஐ தரம் கொண்டது. இதன் ஒளிர் திறன் 450 nits ஆகும். ஸ்கிராட்ச் மற்றும் நீர் இவற்றால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வசதி உள்ளது. குரல் கட்டளைகளுக்கு (voice commands) ஏற்ப செயல்படுவதற்கு அமேசான் அலெக்ஸா வசதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.பயனர்கள் இதன் முகத்தை தங்கள் விருப்பத்திற்கேற்ற படங்களைக் கொண்டு மாற்றிக்கொள்ளலாம். இரத்தத்தில் ஆக்ஸிஜன் செறிவைக் கணக்கிடக்கூடிய ஆக்ஸிஜன்பீட்ஸ் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதி கொண்டது.

24 மணி நேரமும் இதயத் துடிப்பைக் கண்காணிக்கக்கூடியது. பயனரின் உறக்கத்தின் தரம் மற்றும் மன அழுத்தத்தைக் கணக்கிடக்கூடியது. இசை கோப்புகளை வைத்துக்கொள்ள 3ஜிபி சேமிப்பளவு கொண்டது. இதிலுள்ள ஸ்பீக்கரில் இசையை ஒலிக்கச் செய்யலாம். பவர்பட்ஸ் (PowerBuds) மூலமாகவும் கேட்கலாம். 246 mAh மின்கல வசதி கொண்ட இந்த வாட்ச்சை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரக் காலத்திற்குப் பயன்படுத்தலாம்.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 வாட்சின் விலை ரூ.12,999/- ஆகும். முன்பதிவு செய்வோருக்கு ரூ.1,799/- மதிப்புள்ள பட்டை (strap) இலவசமாகக் கிடைக்கும். தற்போது கறுப்பு வண்ணத்தில் மட்டும் கிடைக்கிறது. இனி டெசர்ட் ரோஸ் மற்றும் கிரே வண்ணங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading மியூசிக் ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஸ்மார்ட் வாட்ச்: முன் பதிவு நடக்கிறது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விரைவில் டெஸ்க்டாப் வாட்ஸ்அப்பில் புதிய வசதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்