கூகுள் டிரைவுக்கு மாற்றாக இந்திய கிளவுட் ஸ்டோரேஜ் தளம்

கணினி கோப்புகளைச் சேமித்து வைக்கவும், மற்றவர்களுடன் பகிரவும் கூகுள் டிரைவ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள சேமிப்பகங்களில் (server) கிளவுட் ஸ்டோரேஜ் தளமான டிஜிபாக்ஸ் (DigiBozz) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நிதி ஆயோக்கினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிபாக்ஸ் தளத்தில் மின்னஞ்சல் முகவரி அல்லது அலைபேசி எண்ணைக் கொண்டு 2 ஜிபி அளவு வரைக்குமான கோப்புகளைக் கட்டணமின்றி பகிர முடியும். இதற்கென ஓர் இணைப்பு உருவாகும். அந்த இணைப்பினை கோப்பினை பகிர வேண்டியவருக்கு அனுப்பினால் அவர் அந்த இணைப்பின் மூலம் கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த இணைப்புக்கான கோப்புகள் 45 நாள்கள் வரைக்கும் சேமிப்பில் இருக்கும் அதன்பின்பு அந்த இணைப்பு பயன்படாது. கோப்பும் அழிக்கப்பட்டுவிடும்.டிஜிபாக்ஸில் பயனர்கள் கோப்புகளை tag பயன்படுத்தித் தேட முடியும். அதில் திருத்தங்கள் செய்ய முடியும். புழக்கத்தில் இருக்கும் பெரும்பான்மை வகை கோப்புகளை (file) இதில் பயன்படுத்த முடியும்.தனிநபர் பயனர்கள் கட்டணமின்றி 20ஜிபி வரை பயன்படுத்த முடியும். ஆனால் ஒரு ஃபைல் அதிகபட்சம் 2 ஜிபி அளவு மட்டுமே இருக்கமுடியும். மாதத்திற்கு ரூ.30/- கட்டணத்தில் 5டிபி வரைக்கும் பகிர முடியும். இதில் தனி ஒரு ஃபைல் 10 ஜிபி வரைக்கும் இருக்கலாம். வணிக பயன்பாட்டுக்கு ரூ.999/- கட்டணத்தில் 50டிபி சேமிப்பளவை 500 பயனர்கள் பயன்படுத்தலாம். இதில் தனி ஒரு ஃபைல் 10 ஜிபி அளவுக்கும் குறைவாக இருக்கவேண்டும். இதில் ஜிமெயிலையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்த முடியும்.

You'r reading கூகுள் டிரைவுக்கு மாற்றாக இந்திய கிளவுட் ஸ்டோரேஜ் தளம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹெல்மட் நிதியில் ஊழல் : ஓய்வு பெற்ற எஸ்பி உள்பட மூவருக்கு ஓராண்டு சிறை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்