48 எம்பி முதன்மை காமிராவுடன் நோக்கியா 5.4 அறிமுகம்: பிப்ரவரி 17ம் தேதி விற்பனை

கடந்த ஆண்டு ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 3.4 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் புதிய பட்ஜெட்டுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குவல்காம் ஸ்நாப்டிராகன் SoC கொண்ட இந்த இரு போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படுபவை. விரைவில் இயங்குதளம் ஆண்ட்ராய்டு 11க்கு மேம்படுத்தப்பட உள்ளது.

நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

சிம் : இரட்டை நானோ சிம்
தொடுதிரை : 6.39 அங்குலம் எச்டி+; 720X1560 பிக்ஸல் தரம்; 19.5:9 விகிதாச்சாரம்; 400 nits பீக் பிரைட்நஸ்
இயங்குவேகம் : 4 ஜிபி மற்றும் 6 ஜிபி
சேமிப்பளவு : 64 ஜிபி (512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி அதிகரிக்கலாம்)
முன்புற காமிரா: 16 எம்பி ஆற்றல்
பின்புற காமிரா : 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (குவாட் ரியர் காமிரா)
பிராசஸர் : குவல்காம் ஸ்நாப்டிராகன் 662 SoC
மின்கலம் : 4,000 mAh
சார்ஜிங் : 10 W
எடை : 181 கிராம்

வைஃபை, புளூடூத் 4.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி, பிராக்ஸிமீட்டர் சென்சார், பின்புறம் விரல்ரேகை உணரி, தனி கூகுள் அசிஸ்டெண்ட் பொத்தான் ஆகிய வசதிகள் கொண்டது.நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் 4ஜிபி+64 ஜிபி வகையானது ரூ.13,999/- விலையிலும் 6 ஜிபி + 64 ஜிபி வகையானது ரூ.15,499/- விலையிலும் கிடைக்கும். பிப்ரவரி 17ம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் மற்றும் நோக்கியா இந்தியா தளங்களில் இதன் விற்பனை தொடங்கும்.

You'r reading 48 எம்பி முதன்மை காமிராவுடன் நோக்கியா 5.4 அறிமுகம்: பிப்ரவரி 17ம் தேதி விற்பனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தை அமாவாசை : மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்