பார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம்

சீன வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக்கை போன்ற தளத்தை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆப்பிள் ஸ்டோரில் பார்ஸ் (BARS) என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ராப்ஸ் (raps) என்னும் இசைத்துணுக்குகளை இதில் பகிரலாம் என்று கூறப்படுகிறது.


இசை தயாரிப்பு கருவிகளை பயன்படுத்துவது சிரமமான ஒன்று. அது செலவும் மிக்கது. ஆனால் பார்ஸ் செயலியின் மூலம் தொழில்முறையாக உருவாக்கப்பட்ட இசைத்துணுக்குகளை தெரிவு செய்து அதற்கான வரிகளை எழுதி, பதிவு செய்ய முடியும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


பார்ஸ் உங்களுக்கான பாடல்களைக் குறித்து ஆலோசனை கொடுக்கும். சேகரிப்பிலுள்ள ஒலி மற்றும் காட்சியமைப்புகளுக்கான முறைமைகளை தெரிவு செய்து உங்கள் உயர்தர படைப்புகளை உருவாக்கலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.


பார்ஸ் செயலியானது ஒரு ஸ்டுடியோவுக்கு இசைப்பதிவுக்குச் சென்ற அனுபவத்தை கொடுக்கிறது என்று ராப் வெளியிடுவோர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோ செயலியான கொலாப்பை (Collab) வெளியிட்டுள்ளது

You'r reading பார்ஸ் - ஃபேஸ்புக்கின் டிக்டாக் போன்ற தளம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏப்ரல் 14 முதல் திருப்பதி கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்