பில் கேட்ஸ் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் எது தெரியுமா?

கிளப் ஹவுஸ் ஆடியோ செயலிக்கு அளித்த பேட்டியில் பில் கேட்ஸ், தாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களை பற்றியும், அவற்றை பயன்படுத்துவதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உடன் நிறுவனரும் உலகத்தின் 3வது பெரிய பணக்காரருமான பில்கேட்ஸ் கிளப் ஹவுஸ் செயலிக்கு பேட்டியளித்துள்ளார். தாம் அவ்வப்போது ஐபோன்களை பயன்படுத்துவதாக கூறிய பில் கேட்ஸ், எப்போதும் தம்முடன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலான ஸ்மார்ட்போனை கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

சில ஆண்ட்ராய்டு இயங்குதள ஸ்மார்ட்போன்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவன மென்பொருள்கள் நிறுவப்பட்டிருப்பதால் தமக்கு அவற்றை பயன்படுத்துவது எளிதாக இருப்பதாகவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். தம்முடைய நண்பர்கள் ஐபோன்களை பயன்படுத்தினாலும், மைக்ரோசாஃப்ட் மென்பொருள்கள் இயங்குதளத்தோடு எளிதாக இணைந்து செயல்படக்கூடியவையாதலால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அவை நிறுவப்படுகின்றன என்றும், ஆப்பிள் தவிர்த்த ஸ்மார்ட்போன்களுக்கான தளத்தில் 2019ம் ஆண்டு மைக்ரோசாஃட் பிடிக்கவேண்டிய இடத்தை ஆண்ட்ராய்டு தளத்திடம் இழந்தது பெரிய தவறாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளப் ஹவுஸ் செயலி தற்போது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மட்டுமே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு தளத்திற்கான கிளப் ஹவுஸ் செயலியை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அதன் உடன் நிறுவனர் பால் டேவிசன் தெரிவித்துள்ளார். தற்போது ஐஓஎஸ் தளத்தில் மட்டுமே கிளப் ஹவுஸ் செயலி கிடைக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரில் அது தரவிறக்கம் செய்வதற்குக் கிடைத்தாலும், அதில் பயனர்கள் பதிவு (sign up) செய்ய இயலாது. இந்த மொபைல் செயலிக்கான வடிவம் செயல்பாட்டுக்கு வந்ததும் உங்களுக்குத் தெரிவிப்போம் என்ற செய்தி மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பில் கேட்ஸ் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் எது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேமுதிக ஒருபோதும் தலைகுனியாது: விஜய பிரபாகரின் வீராவேசம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்