பி.எஸ்.என்.எல் வழங்கும் டேட்டா சுனாமி ஆஃபர்!

டெலிகாம் துறையில் ஜியோவின் வருகைக்குப் பின்னர் மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களைக் கவர பலவாறு முயற்சித்து வருகின்றனர்.

`இன்டர்நெட் வசதி எல்லோருக்கும் கிடைக்கும் வகையிலும் குறைந்த விலையில் கிடைக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்ற அறிமுகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் களம் இறங்கியது ரிலையன்ஸ் ஜியோ.

ஜியோவுக்குப் போட்டியா மற்ற செல்போன் நிறுவனங்கள் கடுமையா அதிரடி ஆஃபர்களை அறிவித்தாலும் ஜியோவை நெருங்கவே முடியவில்லை. யார் எவ்வளவு ஆஃபர் அளித்தாலும் அவற்றை தூக்கி சாப்பிடுவது போல் அமைகிறது அடுத்து வெளியாகும் ஜியோவின் சலுகைகள்.

ஆனால், ஜியோவை ஒழிக்க தனியார் நிறுவனங்கள் அளித்த சலுகையைக் காட்டிலும் தற்போது பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ள சலுகை தான் புயல் வேகத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

டேட்டா சுனாமி எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்ட சலுகையில் அடிப்படையில் மாதம் வெறும் 98ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா பெறலாம் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது.

இத்திட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading பி.எஸ்.என்.எல் வழங்கும் டேட்டா சுனாமி ஆஃபர்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காதலித்ததால் ஆத்திரம்: மகனின் கண்களை பிடுங்கி எடுத்த தந்தை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்