கூகுளில் இனி கூகுள் ப்ளஸ் இல்லை!

கூகுள் ப்ளஸின் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் ப்ளஸ் சமூக வலைதளத்தை மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஊடகம் ஒன்றில் கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக திங்கட்கிழமை செய்தி வெளியானது. கூகுள் ப்ளஸ் கணக்குகளை தொடங்குவதற்கு ஒவ்வொரு பயனாளர்களும் ஒரு அப்ளிகேஷனை பூர்த்தி செய்திருப்போம். அதில் பயனாளர் பெயர், வயது, பாலினம், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பலவற்றுக்கும் பதிலளித்து பூர்த்தி செய்திருப்போம். இந்நிலையில் இந்த தகவல்கள் தான் மூன்றாம் தர நபர்களால் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் நிறுவனம் கூகுள் ப்ளஸ் சமூக வலைத்தளத்தை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக் நிறுவனமும் தகவல்கள் திருடப்பட்டதாக கூறி தன் சமூக வலைதள பக்கத்தை கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வந்தது. ஃபேஸ்புக் நிறுவனரும் தகவல்கள் திருடப்பட்டதற்காக மன்னிப்பும் கோரினார். இந்நிலையில் இதே நிலைதான் கூகுள் ப்ளஸிற்கும் நேர்ந்துள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக கூகுள் ப்ளஸ் செயல்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது தகவல் கசிவு காரணமாக கூகுள் ப்ளஸ் மூடப்படுவது பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

கூகுள் ப்ளஸ் நெட்வொர்க்கை முழுமையாக மூட 10 மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading கூகுளில் இனி கூகுள் ப்ளஸ் இல்லை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதல்வர் மீதான திமுக புகாரில் முகாந்திரம் இல்லை- லஞ்ச ஒழிப்புத்துறை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்