கூகுள் மேப்பில் ஹேஸ்டேக் பயன்படுத்தி ஈஸியா இடத்தை கண்டுபிடிக்கலாம்

Use the hashtag on Google Maps and find the place easily

கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்பில் ஹேஸ்டேக் (hashtags) பயன்படுத்தி எளிதாக இடங்களை கண்டுபிடிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட மற்றும் புதிய இடங்களை ஹேஸ்டேக் பயன்படுத்தி பயனர்கள் கண்டுபிடிக்க உதவும் இந்த வசதி உலகமெங்கும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஒவ்வொரு பரிசீலனைக்கும் (review) பயனர்கள் குறிப்பான மற்றும் பயனுள்ள ஐந்து ஹேஸ்டேக்குகளை சேர்த்துக் கொள்ள முடியும். பரிசீலனையின் இறுதியில் சேர்க்கப்படும் இந்த ஹேஸ்டேக்குகள் எளிதாக வாசிக்கவும் உதவும்.

இம்முறையில் உள்ளூரின் முக்கியமான இடங்கள், அவற்றிலுள்ள சக்கர நாற்காலி, சாய்தளம் போன்ற வசதிகளை குறிப்பிடும் ஹேஸ்டேக்குகளையும் உருவாக்கிக் கொள்ளலாம். பரிசீலனை பகுதியில் காணப்படும் நீல நிற இணைப்பின் மீது சொடுக்கி (tap) இந்த வசதியை பெறலாம்.

#love மற்றும் #food போன்ற பொதுவான பதங்கள் இந்த முறையில் உதவாது என்று கூகுள் அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்ட் தளத்தில் கிடைக்கும் இவ்வசதி எப்போது ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும் என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

You'r reading கூகுள் மேப்பில் ஹேஸ்டேக் பயன்படுத்தி ஈஸியா இடத்தை கண்டுபிடிக்கலாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலகக் கோப்பை ஹாக்கி; இந்தியாவிடம் தென்ஆப்ரிக்கா படுதோல்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்