முன்னும் பின்னும் இரட்டை காமிராக்கள்: ஃபோவாய் ஒய்9 ஜனவரி 15ம் தேதி முதல் விற்பனை

Dual cameras back and forth: huawei Y-9 was sold on January 15th

பின்பக்கம் 13 மற்றும் 2 மெகாபிக்ஸல் திறன் கொண்ட இரண்டு காமிராக்கள், முன்பக்கம் தற்படம் (செல்ஃபி) எடுக்கக்கூடிய 16 மற்றும் 2 மெகாபிக்ஸல் திறன் கொண்ட காமிராக்கள் கொண்ட ஃபோவாய் ஒய்9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 7ம் தேதி நடப்பதாக இருந்த அறிமுகவிழா மாற்றப்பட்டு ஜனவரி 10ம் தேதி நிகழ்ந்துள்ளது.

ஃபோவாய் ஒய்9 போனின் சிறப்பம்சங்கள்

சிம் கார்டு: இரண்டு நானோ சிம்

தொடுதிரை: 6.5 அங்குலம் FHD (1080X2340)பிக்ஸல் தரம்

காட்சி பகுதி: முப்பரிமாண (3D) கர்டு வடிவமைப்புடன் 19.5:9 விகிதாச்சாரம்

இயக்க வேகம்: 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ஆகிய வகைகளில் கிடைக்கும்

சேமிப்பளவு: 64 ஜிபி சேமிப்பளவு; மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டு 256 ஜிபி வரைக்கும் சேமிப்பளவை கூட்டிக்கொள்ளலாம்.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாக கொண்ட EMUI 8.2

பிராசஸர்: ஹைசிலிக்கான் கிரின் 710 சிஸ்டம் ஆன் சிப்

பேட்டரி: 4000 mAh மின்னாற்றல்

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி, விரல்ரேகை உணரி ஆகிய வசதிகள் கொண்ட ஃபோவாய் ஒய்9 ஸ்மார்ட் போனுடன் 2,990 ரூபாய் மதிப்பிலான ராக்கர்ஸ் ஸ்போர்ட்ஸ் புளூடூத் ஹெட்போன்களும் கிடைக்கும். ரூ.15,990 விலையில் Amazon.in இணையதளம் மூலம் ஜனவரி 15ம் தேதி முதல் இந்தியாவில் இது கிடைக்கும்.

You'r reading முன்னும் பின்னும் இரட்டை காமிராக்கள்: ஃபோவாய் ஒய்9 ஜனவரி 15ம் தேதி முதல் விற்பனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய பெண் விண்வெளிக்குச் செல்கிறார்: இஸ்ரோ தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்