தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்கு அமெரிக்காவில் இருந்து மினசோட்டாவின் குரல்!

தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்கு அமெரிக்காவில் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்குக் குரல் கொடுத்து அமைதிப் போராட்டம் நடத்தியது அமெரிக்காவில் உள்ள டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன். அதேபோல இந்த அசோசியேசன் தமிழர்களின் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது.

அந்த வகையில், சேவ் தமிழ்நாடு அண்டு தமிழ்ஸ் (Save Tamilnadu & Tamils) என்ற பதாகையின் கீழ், ‘தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்கு மினசோட்டாவின் குரல்’ என்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நெடுவாசலை காப்பாற்றுவது, ராமேஸ்வரம் மீனவர்கள் விவகாரம், விவசாயிகள் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு, மணல் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு நீதி கேட்கும் விதமாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றது.

இம்மாதம் (ஏப்ரல்) 8-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபொறுகின்றது.

“நீதி கேட்கப் போராடவா தமிழா”

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தமிழ்நாட்டுப் பிரச்னைகளுக்கு அமெரிக்காவில் இருந்து மினசோட்டாவின் குரல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வைரமுத்து வியாபாரி; வைகோ அறியாமை - பொங்கும் கலாம் ஆலோசகர் பொன்ராஜ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்