தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் ஜிசாட்-31 - இஸ்ரோ மேலும் ஒரு சாதனை!

nbspIsro successfully launched gsat 31 satellite

தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வேளையில் கிராமப்புறங்களில் இன்னும் மேம்பட்ட சேவைகள் கிடைக்காமலே இருந்து வருகின்றன. இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களிலும் இந்த குறைபாடுகளை காண முடிகிறது. இதனை சரி செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிராமப்புற பகுதிகளில் தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்த ஜிசாட்-31செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்தது. விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவைகளை கிராமப்புறப் பகுதிகளுக்கும் துல்லியமாக கிடைக்கவும் மேம்பட்ட வகையில் வழங்கவும், என்ற வகையில் ஜிசாட்-31 செயற்கைகோள் உருவாக்கப்பட்டது.

இன்று அதிகாலை 2.31 மணியளவில் தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுதளத்திலிருந்து ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் 2,535 கிலோ எடையுடன் 15 வருடம் ஆயுட்காலம் உள்ள வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக எடையுள்ள செயற்கைக்கோளை இந்தியாவில் இருந்து அனுப்ப இயலாது என்பதால் பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதே பிரெஞ்ச் கயானாவில் இருந்து கடந்த டிசம்பர் 5ம் தேதி இந்தியாவின் ஜிசாட் 11 வெற்றிகரமாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.


You'r reading தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் ஜிசாட்-31 - இஸ்ரோ மேலும் ஒரு சாதனை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆறு மணி நேரத்துக்கு மேல் கம்ப்யூட்டரை பார்க்கிறீர்களா? கண்ணீர் சுரப்பி பத்திரம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்