செல்போனில் 30 நிமிடம் தொடர்ந்து பேசினால் மூளை புற்றுநோய் அபாயம் - நிபுணர்கள் எச்சரிக்கை!

experts alarms more usage of cellphone cause brain cancer

செல்போனில் தொடர்ந்து 30 நிமிடங்கள் பேசினால் மூளை புற்றுநோய் ஆபத்து உள்ளதாக மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செல்போன் கோபுரங்கள், வீடுகளில் வைஃபை ஆகியவை 24 மணி நேரமும் கதிர்வீச்சு அலைகளை பரப்புகின்றன. கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மின் கதிர்வீச்சு பேராசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆய்வு நடத்தி லண்டனில் சமர்ப்பித்ஒள்ள அறிக்கையில் அதிர்ச்பி தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு செல்போனில் பேசினால் பத்து வருடங்களில் மூளை புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செல்போன் அறிமுகமான 1985 முதல் மூளை புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறுவர்களை இந்த நோய் அதிகம் தாக்கும் அபாயம் உள்ளதால் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

You'r reading செல்போனில் 30 நிமிடம் தொடர்ந்து பேசினால் மூளை புற்றுநோய் அபாயம் - நிபுணர்கள் எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்