சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்ட டாக்டர்..... இந்திய வம்சாவளி பெண் கொலை வழக்கில் போலீசாருக்கு கிடைத்த துப்பு

indian orgin lady doctor killed australia

ஆஸ்திரேலியாவில் 32 வயதான இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார் ப்ரீத்தி ரெட்டி. இந்திய வம்சாவளியான இவர் சிட்னி நகரின் அருகே வசித்து வந்தார். இந்நிலையில்கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டிற்கு சென்றுள்ளார் ப்ரீத்தி. ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ப்ரீத்தி காணாமல் போனதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தனர். புகாரை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த சூட்கேஸில் ப்ரீத்தி சடலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது. இவரை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்த விவரம் தெரியாத நிலையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அதில், மருத்துவ மாநாட்டிற்கு சென்ற பிறகு ஹோட்டலில் முன்னாள் காதலனுடன் தங்கியுள்ளார் ப்ரீத்தி.

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் ஒரு கடையில் உணவு வாங்கக் காத்திருந்த பிரீத்தி உணவு வாங்கிய பின் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. முன்னதாக ப்ரீத்தி காணாமல் போனதாக புகார் அழிக்கப்பட்ட உடன் அவரது முன்னாள் காதலன் ஹர்ஷவர்தன் போலீஸாரின் சந்தேகப் பார்வை மீது விழவே நான்காம் தேதி போலீசார் அவரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ப்ரீத்தி காணாமல் போனது தொடர்பாக தனக்குத் தெரியாது என மறுத்துள்ளார் ஹர்ஷவர்தன். இந்த விசாரணை நடைபெற்ற சில மணி நேரத்தில் ஹர்ஷ்வர்தன் நார்டே சென்ற கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்தநாள் ப்ரீத்தியின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹர்ஷ்வர்தனும், ப்ரீத்தியும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் தான் இருவரும் பிரிந்துள்ளனர். இந்தநிலையில் தான் இவர்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்துள்ளது. ஹர்ஷ்வர்தன் மரணத்துக்கு பிறகு இருவரும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஹர்ஷ்வர்தன் கனமான சூட்கேஸ் ஒன்றை ஹோட்டல் பணியாளர் உதவியுடன் தூக்கிச் சென்றதும் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் இது முக்கிய துப்பாக பார்க்கப்படுகிறது. போலீஸார் கார் விபத்தில் பலியான ஹர்ஷ்வர்தன்தான் கொலை செய்தவர் என நம்புகிறது. எனினும் உறுதியான ஆவணங்களுக்காக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஹர்ஷ்வர்தன் விபத்து தொடர்பாக விசாரித்த அதிகாரிகள், இந்த விபத்து வேண்டுமென்றே நடத்தப்பட்ட விபத்து என்கின்றனர். இருப்பினும் ஹர்ஷ்வர்தனும் இறந்துவிட்டதால் போலீசாருக்கு இந்த வழக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

You'r reading சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்ட டாக்டர்..... இந்திய வம்சாவளி பெண் கொலை வழக்கில் போலீசாருக்கு கிடைத்த துப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `இரண்டு நாளாக பார்க்கவிடவேயில்லை' - மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை இறந்ததா... திருப்பூர் அரசு மருத்துவமனையை சுற்றும் சர்ச்சை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்