எத்தியோப்பியாவில் விமான விபத்து எதிரொலி - போயிங் ரக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

plane crash, Ethiopian airlines grounds Boeing 737 flights

எத்தியோப்பியாவில் விமான விபத்தில் 157 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போயிங் ரக விமானங்கள் அனைத்தையும் இயக்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாமாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 149 பயணிகள், ஊழியர்கள் 8 உட்பட 157 பேர் உயிரிழந்தனர். விமான விபத்துக்கான காரணம் இன்னமும் தெரியவில்லை.

இதனால் விபத்து பற்றிய விசாரணை முடியும் வரை விபத்துக்குள்ளான போயிங் 737 - 8 Max ரக இதர விமானங்கள் அனைத்தும் இயக்கப்படாது என்று எத்தியோப்பியன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் இந்த ரக போயிங் விமானங்கள் நேற்று மாலை முதலே இயக்கப்படவில்லை.

You'r reading எத்தியோப்பியாவில் விமான விபத்து எதிரொலி - போயிங் ரக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையும் லோக்சபா தேர்தலுடன் நடத்த திமுக வலியுறுத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்