சக ஆசிரியை பழிவாங்க குழந்தைகளை பலிகடா ஆக்கிய ஆசிரியை - சீனாவில் நடந்த கொடூர சம்பவம்

china teacher accused for poison food given to students

சீனாவின் கிண்டர்கார்டன் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் குழந்தைகள் என்றுகூட பாராமல் விஷம் கொடுத்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசூவோ நகரில் மெங்மெங் மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று வழக்கம்போல் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட குழந்தைகள் அனைவரும் ஒரே நேரத்தில் உடல்நலம் குன்றி போயுள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் சோடியம் நைட்ரேட் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துது. இறைச்சியை பதப்படுத்துவதற்காக பயன்படும் வேதிப்பொருள் எப்படி உணவில் கலக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்பட விவகாரம் போலீஸ் வரை சென்றது.

பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தைகளுக்கு உணவு கொடுத்த வாங் என்ற ஆசிரியையிடமும் விசாரணை நடந்தப்பட்டதில் உண்மை வெளிவந்தது. அவர் தான் இந்தக்குற்றத்தை செய்ததும் தெரியவந்தது. அதில், தனதுடன் பணிபுரியும் ஆசிரியை பழிவாங்கவே, அந்த ஆசிரியை இவ்வாறு செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் முழுமையாக தகவல்களை பெற விசாரணை நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். மேலும் மழலையர் பள்ளி மூடப்பட்டதுடன், மற்ற குழந்தைகள் அனைவரும் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். உடனடியாக 15 குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் 7 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் ஒரு குழந்தைக்கு மட்டும் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வளாகம் தெரிவித்துள்ளது.

You'r reading சக ஆசிரியை பழிவாங்க குழந்தைகளை பலிகடா ஆக்கிய ஆசிரியை - சீனாவில் நடந்த கொடூர சம்பவம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வயதான பெண்மணிக்கு உதவிய ஊழியர்கள் – ஏர் இந்தியா சேவையை பாராட்டிய பயணிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்