குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய மாணவர்... 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

10 years prison for indian student destroy college equipment

அமெரிக்காவில் தான் படித்த கல்லூரியின் 50க்கும் மேற்பட்ட கணினிகளை செயலிழக்கச்செய்ததாக இந்திய மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர் விஸ்வநாத் அகுதோடா. 27 வயதாகும் இவர் மாணவர் விசாவில் அமெரிக்கா சென்று, நியூயார்க் மாகாணத்தின் தலைநகரான அல்பேனியில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் தான் படித்துவந்த கல்லூரியின் கணினிகளை வேண்டுமென்றே செயலிழக்கச் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். "USB Killer" என்ற சாதனத்தை பயன்படுத்தி கடந்த பிப்ரவரி 14ம் தேதி கல்லூரியின் 66 கணிப்பொறிகள், என்னற்ற மானிட்டர்கள், இதர சாதங்களை செயலிழக்கச் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இந்த யுஎஸ்பி கில்லர் என்பது நார்மலான யுஎஸ்பி மாதிரியாகவே இருக்கும். இதனை கம்ப்யூட்டரில் பொருத்தினால் அதனால் கம்ப்யூட்டரின் கெபாசிட்டருக்கு மின் வேகம் அதிகரிக்கப்பட்டு கம்ப்யூட்டரின் பேட்டரி அமைப்பே அழிக்கப்படும். இதன் மூலம் மானிட்டர், சிபியு அனைத்தும் செயலிழக்கும். இந்த முறை மூலமாவகே தான் கணினிகளை செயலிழக்கச்செய்ததாக விஸ்வநாத் வாக்குமூலம் கொடுத்தார். விஸ்வநாத் சேதப்படுத்திய கமப்யூட்டரின் மதிப்பு ரூ.40 லட்சத்துக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து மாணவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில், மாணவர் விஸ்வநாத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், USD 250,000 ( இந்திய மதிப்பில் சுமார் 1.75 கோடி ரூபாய்) அபராதமும் அறிவிக்கப்பட்டது.

You'r reading குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய மாணவர்... 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `4 பேர் ஆர்வமுடன் இருகின்றனர்' - தீர்வை நோக்கி ஜெட் ஏர்வேஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்