இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்! தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு!!

srilanka bomb blast victim photo released today

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

இலங்கையில், ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து எட்டு இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூரத் தாக்குதலில் 350-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பிறகும், இலங்கையில் பல இடங்களில் வெடிப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்பு கொழும்புவின் பிரதான பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டு அவைகளை செயலிழக்கச் செய்தனர் போலீஸார். இந்நிலையில், இலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் இன்று  200 டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் அதீத பாதுகாப்புகள்  போடப்பட்டுள்ளன.

ஆங்காங்கே குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருவதால், இன்றிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. அதோடு, வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதால் இலங்கையில் நாளை முதல் 28ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமாகக் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சூழலில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 8 பேரின் புகைப்படங்களை இலங்கை குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் பொது மக்கள் உடனடியாக தகவல் தர வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளனர். தகவல் தர வேண்டிய தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த தொலைபேசி எண்கள் வருமாறு:

071-8591771, 011-2422176, 011-2395605 இந்த தகவல், இலங்கையில் உள்ள இணையதள செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு 2 உயர் அதிகாரிகள் நீக்கம்! சிறிசேனா நடவடிக்கை!!

You'r reading இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்! தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா? டாஸ் வென்று பந்து வீசுகி்றது ராஜஸ்தான்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்