முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட வேண்டாம் இலங்கை உலமா அமைப்பு வலியுறுத்தல்!

Muslim clerics organization in Sri Lanka requests Muslim women not to hinder security forces by wearing Niqab

இலங்கையில் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட வேண்டாம் என்று அந்நாட்டு உலமா அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்ற அந்த அமைப்பு, தேசிய பாதுகாப்பை பேணுவோம் என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் பொறுப்பு வாய்ந்த இலங்கை பிரஜைகளாகவும், எமது தாய்நாட்டை பாதுகாக்கவும், நாட்டில் சமாதானத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டவும் கடமைப்பட்டுள்ளோம். இதனடிப்படையில் பாதுகாப்பு படையினருக்கும், சட்ட அமலாக்கும் அமைப்புகளுக்கும் ஒத்தாசையாக இருக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.

குறிப்பாக, நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை கவனத்தில் கொள்ளுமாறும், பாதுகாப்பு படையினர் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் போது அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம். எனவே, எமது சகோதரிகள் தற்போதுள்ள நிலைமையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறோம். அவ்வாறே அனைவரும் தன்னை அடையாளப்படுத்தி, அடையாள அட்டையை வைத்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த குறி இஸ்லாமிய மக்களா..? இலங்கையில் ஊடுருவும் ஸ்லீப்பர் செல்ஸ்!

You'r reading முஸ்லிம் பெண்கள் முகத்தை மூட வேண்டாம் இலங்கை உலமா அமைப்பு வலியுறுத்தல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் படு தோல்வி...! பெரம்பலூரில் எதிரொலித்திருக்கிறது...! - எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்