இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

Two suspected IS terrorists killed by sri Lankan force in an encounter

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்பு படையின் சுட்டுக் கொன்றனர்.

இலங்கை தலைநகர் கொழும்பு புறநகர் பகுதியில் கடந்த ஞாயிறன்று பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலால் அந்நாடே நிலைகுலைந்து போயுள்ளது.ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கர குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் தான் காரணம் என்பது தெரிய வந்து, நாடு முழுவதும் தீவிரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும்படியான நபர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மனித குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது இலங்கை அரசு.

இந்நிலையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகப்படும் நபர்கள் சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இறுதியில் தீவிரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் அப்பாவி பொதுஜனம் ஒருவரும் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கல்: பீதியை கிளப்பிய லாரி டிரைவர் கைது

You'r reading இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மாமியார் வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற டிரைவரால் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்