நம்பிக்கையில்லா தீர்மானம் ரணில் அரசு தப்பியது

no confidence motion against srilanka government defeated in parliment

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றது.

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசு நடைபெற்று வருகிறது. அதிபராக சிறிசேனா உள்ளார். இந்நிலையில், ரணில் அரசு மீது நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா(ஜே.வி.பி) கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தின் மீது கடந்த 2 நாட்களாக கடும் விவாதம் நடைபெற்று வந்தது. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 119 வாக்குகளும், ஆதரவாக 92 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது. ரணில் அரசுக்கு வெற்றி கிடைத்தது.

போதைக் கடத்தலுக்கு மரண தண்டனை: சிறிசேனாவுக்கு ரணில் எதிர்ப்பு

You'r reading நம்பிக்கையில்லா தீர்மானம் ரணில் அரசு தப்பியது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காங்கிரஸ் தலைவராக மம்தா பானர்ஜி : சாமி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்