பிரதமரின் இல்லத்திற்கு தோழியுடன் செல்வாரா ஜான்சன்? பிரிட்டனில் இப்படியொரு சர்ச்சை...

Will UK PM Johnson bring first girlfriend into No.10 Downing street ?

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் இருந்த தெரசா மே சமீபத்தில் ராஜினாமா செய்தார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான பிரக்ஸிட் ஒப்பந்தம் போடுவதில் நீண்ட இழுபறி ஏற்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு ஷரத்துக்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகள் ஏற்பட்டதால், கடைசி வரை அதை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதன் காரணமாகவே, பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியில் புதிய பிரதமர் பதவிக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன், மைக்கேல் கோ, ஆண்ட்ரியா, ஜெர்மிஹன்ட், ஸ்டீவர்ட், மட்ஹான்காக், எஸ்தர்மேக் வே ஆகியோர் போட்டியிட்டனர். இதில், போரிஸ் ஜான்சன் 66 சதவீத ஓட்டுகள் பெற்று வென்றார்.

இதையடுத்து, தெரசா மே பதவி விலகினார். புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். போரிஸ் ஜான்சன் தனது மனைவி மரினா வீலர் மற்றும் குழந்தைகளை விட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரிந்து விட்டார். ஜான்சனும், மரீனாவும் முறைப்படி விவாகரத்து பெற்று விட்டனர். இதற்கிடையே, கன்சர்வேடிவ் கட்சியில் தகவல் தொடர்பு பிரிவு தலைவியாக இருந்த கேரி சைமண்ட்ஸ் என்ற 31 வயது பெண்ணுடன் நட்பாக பழகிய போரிஸ் ஜான்சனுக்கு அவருடன் நெருக்கம் ஏற்பட்டது. இரவில் சைமண்ட்ஸ் வீட்டில் தங்கியும் வந்தார்.

இந்த சூழலில்தான், நாட்டின் பிரதமராக ஜான்சன் தேர்வாகி உள்ளார். இங்கிலாந்தில் பிரதமருக்கான இல்லம், ‘நம்பர் 10, டவுனிங் தெரு’ என்ற முகவரியில் உள்ளது. இது உலக அளவில் பிரபலமானது. இந்த அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு ஜான்சன் இன்னும் குடியேறவில்லை. அவர் தனது பெண் நண்பர் சைமண்ட்ஸை தன்னுடன் இந்த இல்லத்திற்கு அழைத்து செல்வாரா? மனைவியை விட்டு விட்டு, இன்னொரு பெண்ணை அழைத்து செல்வது முறையாக இருக்குமா? அது தவறான முன்னுதாரணமாகி விடாதா? என்று இங்கிலாந்தில் பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்நாட்டில் கடந்த 1721ம் ஆண்டில் இருந்து இது வரை 54 பிரதமர்கள் இருந்துள்ளார்கள். அவர்களில் 2 பேர் மட்டுமே விவாகரத்து பெற்றவர்கள். அகஸ்தஸ் ஹென்றி விவாகரத்து பெற்று தனி ஆளாக, டவுனிங் தெரு வீட்டிற்கு வந்தாலும் பின்னர் மறுமணம் செய்து கொண்டார். எட்வர்டு ஹீத் என்ற பிரதமர் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாதவர். தற்போது விவகாரத்து பெற்ற 2வது பிரதமரான ஜான்சன், பெண் நண்பரை தன்னுடன் டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு அழைத்து செல்வாரா, அவருக்கு முதல் குடிமகள் அந்தஸ்து அளிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.

பிரிட்டன் பிரதமரின் முட்டாள்தனம்; கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப்

You'r reading பிரதமரின் இல்லத்திற்கு தோழியுடன் செல்வாரா ஜான்சன்? பிரிட்டனில் இப்படியொரு சர்ச்சை... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'மீண்டும் எம்.பி வாய்ப்பு தராதது வருத்தம்' அதிமுகவில் கலகக் குரல் எழுப்புகிறாரா மைத்ரேயன்..? ஜெ.சமாதி முன் குமுறல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்