ஈரானில் ராக்கெட் முயற்சி தோல்வி டிரம்ப் வெளியிட்ட படத்தால் பரபரப்பு

Trumps Iran photo raises worries about disclosure of US surveillance secrets

ஈரானில் ராக்கெட் ஏவுதளத்தில் வெடித்து சேதம் ஏற்பட்டது குறித்த துல்லியமான படத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாடு, அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை அடிக்கடி நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக ஈரான் அதிபர் கிம்மிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதனால், ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை நீக்குவதற்கு அமெரிக்கா மறுத்து வருகிறது.

இந்நிலையில், ஈரானில் ராக்கெட் ஏவுதளத்தில் நான்கைந்து இடங்களில் குண்டு வெடித்து சேதம் ஏற்பட்டிருப்பதைக் காட்டும் போட்டோவை அமெரிக்க அதிபர் டிரம்ப், ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார். அத்துடன், ‘‘ஈரான் ராக்கெட் வெடித்து சேதம் ஏற்பட்டதற்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈரான் தொடர்ந்து முயற்சிக்க வாழ்த்துக்கள்’’ என்று நக்கலாகவும் கமென்ட் போட்டிருக்கிறார். இது அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்பு திறமைகள் குறித்து பகிரங்கமாக டிரம்ப் வெளியிட்டது சரியா என்று சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, ராக்கெட் வெடிக்கவில்லை, அது பத்திரமாக ஆய்வகத்தில் உள்ளது. ஏவுகளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் பெரிய சேதம் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் படத்துக்கு பதில் கமென்ட் கூறவில்லை.

ஐஎன்எக்ஸ் வழக்கு : ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் திங்கள் வரை நீட்டிப்பு

You'r reading ஈரானில் ராக்கெட் முயற்சி தோல்வி டிரம்ப் வெளியிட்ட படத்தால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடி பிறந்த நாள் விழா பாஜகவின் சேவை வாரம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்