என்னது சிக்கன் காலியா..?- மூடப்பட்ட கேஎஃப்சி ரெஸ்டாரண்ட்கள்

கோழிக்கறி பற்றாக்குறையால் கே.எஃப்.சி தனது சில கிளைகளை மூடும் அளவுக்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலாமன கே.எஃப்.சி ரெஸ்டாரண்டுகள் இன்றைய சூழலில் மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளன. ஐக்கிய நாடுகளில் பல நாடுகளில் தனது கிளைகளை மூட உத்தரவிட்டுள்ளது கே.எஃப்.சி நிர்வாகம்.

இந்த இக்கட்டான சூழலுக்கு முழுமுதற் காரணமாகக் கூறப்படுவது 'கோழிப் பற்றாக்குறை'. கோழிக்கறி இல்லாததால் பல கிளைகளை மூடிய கே.எஃப்.சி நிர்வாகம், சில முக்கியக் கிளைகளை மெனுவின் அளவைக் குறைத்துள்ளது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மட்டும் முக்கிய கிளைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதுதவிர, கோழிக்கறி பற்றாக்குறையாலும், அதை விநியோகிக்கும் கே.எஃப்.சி நிர்வாகத்தின் கூட்டு நிர்வாகமான டி.ஹெச்.என் நிறுவனத்தாலும் கே.எஃப்.சி-க்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கே.எஃப்.சி உணவுப் பிரியர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

You'r reading என்னது சிக்கன் காலியா..?- மூடப்பட்ட கேஎஃப்சி ரெஸ்டாரண்ட்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரஜினி, கமல் சந்திப்பு ஓவர் பில்டப் - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்