அதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருக்கிறது.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

All Is Well, Trump tweets After Iran Fires Missiles at US Bases

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்குப் பின், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எல்லாம் நல்லதுதான். அமெரிக்காவிடம் உலகிலேயே சக்திவாய்ந்த ஆயுதங்கள் இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக்கிலுள்ள பாக்தாத் நகரில் சமீபத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் ஈரானின் தளபதி சொலெய்மணி கொல்லப்பட்டார். அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் முன்பாக சொலெய்மணியுடன் இருந்த ஈராக்கின் தளபதி அபு மஹ்தியும் கொல்லப்பட்டார்.


இதையடுத்து, அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு ஆவேசமாக கூறியிருந்தது. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், ஈராக்கில் அல் அசாத், இர்பில் ஆகிய நகரங்களில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகளின் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி, ஈரான் தாக்குதல் நடத்தியது. இதை டெஹ்ரான் மற்றும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.


இந்நிலையில், அமெரிக்க நேரப்படி 7ம் தேதி இரவு 7 மணிக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லாம் நல்லதுதான். ஈராக்கில் 2 இடங்களில் உள்ள ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. அதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. இது வரை நடந்தது நல்லதுதான். நாம் உலகிலேயே அதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் சிறந்த ராணுவத்தை கொண்டிருக்கிறோம். நாளை காலையில் விரிவான அறிக்கை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.



You'r reading அதிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருக்கிறது.. அதிபர் டிரம்ப் எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈரானில் கிளம்பிய விமானம் கீழே விழுந்து 170 பேர் பலி.. போர் பதற்ற சூழலில் விபத்து..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்