கொரோனா பலி 14,686 ஆக உயர்வு.. இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் சாவு

corona virus death increase to 14,686 in world.

உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 22) வரை 3 லட்சத்து 39,039 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 99,014 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது வரை இந்த நோய்க்கு 14,686 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 22) வரை 3 லட்சத்து 39,039 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 99,014 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது வரை இந்த நோய்க்கு 14,686 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் குணமடைந்தவர் தவிர தற்போது 2 லட்சத்து 25,327 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் உள்ளது. இவர்களில் 2 லட்சத்து 14,774 பேருக்கு சாதாரண அளவில்தான் இந்த வைரஸ் நோய் பாதித்திருக்கிறது. 10,553 பேருக்கு நோய் வீரியம் அதிகமாகி, அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
சீனாவில் 81,094 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 70 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். 3,279 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 5476 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, கடந்த சனியன்று 793 பேரும், ஞாயிறன்று 651 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால், இத்தாலி மக்கள் மிகவும் பீதியடைந்து இறைவனை வேண்டி வருகிறார்கள். தற்போது இத்தாலியில் 59,138 பேருக்கு பாதிப்பு உள்ளது.

அமெரிக்காவில் இது வரை 483 பேர் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். 34,717 பேருக்கு நோய் பாதிப்பு உள்ளது. ஸ்பெயினில் 28,768 பேருக்கு நோய் பாதித்துள்ளது. அவர்களில் 1772 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 23,636 பேர் பாதித்திருக்கிறார்கள். அவர்களில் 1686 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 16,018 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 674 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இது வரை 396 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 89 பேருக்கு நோய் பாதித்துள்ளது.

You'r reading கொரோனா பலி 14,686 ஆக உயர்வு.. இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் சாவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இயக்குநர் - நடிகர் விசு திடீர் மரணம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்