உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு 37,826 பேர் சாவு.. 7.85 லட்சம் பேருக்கு பாதிப்பு

corona death toll rises to 34,017 across the world.

உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 85,855 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 37.826 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், 198 நாடுகளில் பரவியுள்ளது. இன்று(மார்ச்31) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 லட்சத்து 85,855 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 37,826 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 65,659 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 5 லட்சத்து 82,370 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இவர்களில் 29,488 பேருக்கு நோய்ப் பாதிப்பு அதிகமாகி, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அமெரிக்காவில் இது வரை 1 லட்சத்து 64,266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டில் 3170 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் ஒரு லட்சத்து 1739 பேர் பாதித்துள்ளனர். 11,597 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 81,518 பேருக்கு நோய் பாதித்துள்ளது. 3,305 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 87,956 பேருக்கு நோய் பாதிக்கப்பட்டது. 7,716 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 44.550 பேருக்கு நோய் பாதித்துள்ளது. 3024 பேர் உயிரிழந்துள்ளனர்.

You'r reading உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு 37,826 பேர் சாவு.. 7.85 லட்சம் பேருக்கு பாதிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்