பிரதமர் விவகாரத்தில் ஏன் மூக்கை நுழைக்கணும்? மம்தா பானர்ஜி கேள்வி..

Why Should I Poke My Nose Into PMs Affairs, Says Mamata Banerjee.

பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்கணும் என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்து விட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி, இந்தியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமென்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதைக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மக்களின் கஷ்டங்களைப் போக்குவதற்கான நடவடிக்கைகளைத் தெரிவிக்காமல் பிரதமர் இப்படி அறிவித்துள்ளது சரியா என்று கேட்டுள்ளனர். திரிணாமுல் கட்சியினரும் கூட விமர்சித்துள்ளனர்.இந்நிலையில், திரிணாமுல் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியிடம் நிருபர்கள், பிரதமரின் பேச்சு குறித்துக் கேட்டனர். அதற்கு மம்தா பானர்ஜி பதிலளிக்கையில், நான் பிரதமர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கணும்? கொரோனாவை சமாளிப்பதை விட்டு விட்டு, அரசியல் பண்ணும் நேரமா இது? ஏன் தேவையில்லாமல் அரசியல் சண்டையை ஏற்படுத்துகிறீர்கள்? என்றாலும், அவர் கூறுகையில், பிரதமர் மோடியை விரும்புபவர்கள், அவரது அழைப்பைச் செயல்படுத்துவார்கள். நான் அந்நேரம் தூங்க விரும்பினால் தூங்குவேன். இது தனிப்பட்ட விஷயம் என்றும் குறிப்பிட்டார்.

You'r reading பிரதமர் விவகாரத்தில் ஏன் மூக்கை நுழைக்கணும்? மம்தா பானர்ஜி கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் 2வது பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்