உலகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

Coronavirus hits 12,380 around world.

உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,84,042 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,669 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 84,042 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரு லட்சத்து 34,669 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 10,046 ஆக உள்ளது.


கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 6 லட்சத்து 44,348 பேருக்கும், ஸ்பெயினில் ஒரு லட்சத்து 80,659 பேருக்கும், இத்தாலியில் ஒரு லட்சத்து 65,155 பேருக்கும், பிரான்சில் ஒரு லட்சத்து 47,863 பேருக்கும், ஜெர்மனியில் ஒரு லட்சத்து 34,753 பேருக்கும், இங்கிலாந்தில் 98,476 பேருக்கும் சீனாவில் 82,295 பேருக்கும், ஈரானில் 76,389 பேருக்கும், துருக்கியில் 69,392 பேருக்கும் பெல்ஜியத்தில் 33,573 பேருக்கும், பிரேசிலில் 28,610 பேருக்கும், கனடாவில் 28,379 பேருக்கும் நோய் பாதித்துள்ளது.மேலும், அமெரிக்காவில் 28,554 பேர், இத்தாலியில் 21,645 பேர், ஸ்பெயினில் 18,812 பேர், பிரான்சில் 17,167 பேர், பிரிட்டனில் 12,868 பேர் ஈரானில் 4,777 பேர், பெல்ஜியத்தில் 4,440 பேர், ஜெர்மனியில் 3,804 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் 12,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நோய்க்கு 414 பேர் பலியாகியுள்ளனர்.

You'r reading உலகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனாவிலிருந்து 6 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள் வருகிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்