அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சம் தொடுகிறது..

covid19 death toll touches one lakh in USA.

அமெரிக்காவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55 லட்சத்து 88,356 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 47,873 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23 லட்சத்து 65,719 ஆக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் 28 லட்சத்து 74,764 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதிகபட்சமாக, அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நாட்டில் இது வரை 17 லட்சத்து 6226 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 99,805 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 3 லட்சத்து 76,667 பேருக்கு கொரோனா பாதித்திருந்த நிலையில், 23,522 பேர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவில் 3 லட்சத்து 53,427 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 3633 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 2 லட்சத்து 82,480 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில் 26,839 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் 2 லட்சத்து 30,158 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 32,877 பேர் பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் 2 லட்சத்து 61,184 பேருக்கு நோய் பாதித்த நிலையில் 36,914 பேர் உயிரிழந்துள்ளனர்.

You'r reading அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சம் தொடுகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்