உலகம் முழுவதும் 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 4 லட்சம் தாண்டியது

corona cases in worldwide is nearing 80 lakhs.

உலகம் முழுவதும் இது வரை 79 லட்சத்து 88,615 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் அதிகம் பேருக்கு இந்த வைரஸ் நோய் பரவி வருகிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

இன்றைய(ஜூன்15) நிலவரப்படி, உலகம் முழுவதும் 79 லட்சத்து 88,615 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 41 லட்சத்து 7529 பேர் குணம் அடைந்துள்ளனர். 4 லட்சத்து 35,448 பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்நோய் பாதித்து 34லட்சத்து 45638 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அதிகபட்சமாக, அமெரிக்காவில் 21 லட்சத்து 62,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதில் ஒரு லட்சத்து 17,863 பேர் பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் 8 லட்சத்து 67,882 பேருக்கு நோய் பாதித்த நிலையில், 43,389 பேர் பலியாகியுள்ளனர். அடுத்துள்ள ரஷ்யாவில் 5 லட்சத்து 28,964 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 6948 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 4வது இடத்தில் உள்ள இந்தியாவில் 3 லட்சத்து 33,008 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 9520 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்துள்ள இங்கிலாந்தில் 2.95 லட்சம் பேருக்கு நோய் பாதித்த நிலையில், 41,695 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading உலகம் முழுவதும் 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 4 லட்சம் தாண்டியது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா ஊரடங்கு தளர்வு.. மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்