`அதிபராக விருப்பமா?- பிரபல டி.வி தொகுப்பாளினியின் அட்வைஸ்!

அமெரிக்காவின் பிரபல டி.வி தொகுப்பாளினி ஓப்ரா வின்ஃப்ரே. வரும் 2020- ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களுக்கு அவர் ஒரு முத்தான அட்வைஸ் கொடுத்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து, `யார் வேண்டுமானாலும் அதிபராகலாம்’ என்பது போல பேச்சுகள் அமெரிக்க ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. அப்படி முன் மொழியப்பட்ட பட்டியலில் ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு முக்கிய இடம் இருக்கிறது.

இந்நிலையில் வின்ஃப்ரே, `பலர் என்னை 2020-ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுங்கள் என்று கூறுகின்றனர். அவர்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பினாலும் நம்பிக்கையினாலும் தான் அப்படி கூறுகின்றனர்.

ஆனால், எனக்கு அதிபர் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகிறவர்கள் ஒரு விஷத்தை செய்யக் கூடாது. தன் எதிராலியைப் பற்றி மட்டும் சதா சர்வகாலமும் பிரசாரத்தின் போது பேசுவதை தவிர்க்க வேண்டும். இன்னும் கேட்டால் அதற்கு நேரத்தை செலவழிக்காமல், ஆக்கபூர்வமான பல விஷயங்களைச் செய்யலாம்’ என்று பேசியுள்ளார். 

மேலும் செய்திகளை படிக்க:thesubeditor.com 

You'r reading `அதிபராக விருப்பமா?- பிரபல டி.வி தொகுப்பாளினியின் அட்வைஸ்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரோகிங்கியா மக்கள் வாழ்ந்த இடத்திலேயே கட்டப்படும் ராணுவத் தளம்… மியான்மரின் இரக்கமற்ற செயல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்