3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில்.. சிதைந்த ஸ்பெயின் கிராமம்!.. திக் திக் காட்சிகள்

Heavy rain in spain

ஸ்பெயினின் புகழ்பெற்ற செவில் பிராந்தியத்தில் உள்ள எஸ்டெபா கிராமம் பருவமழையால் உருக்குலைந்து போயுள்ளது. செவ்வாயன்று இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை எஸ்டெபா கிராமத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை வெறும் 20 நிமிடங்களில் கொட்டி தீர்த்தத்தால் மொத்த எஸ்டெபா கிராமம் தற்போது தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. திடீரென வரும் தண்ணீரில் ஒரு நொடியில் வீடு ஒன்று அடித்துச் செல்லப்படும் காட்சிகள், அதிவேகத்தில் வரும் தண்ணீர் தெருக்களில் இருந்த வாகனங்களை அடித்துச் செல்லும் காட்சிகள் எனப் பருவமழையின் கோரத்தை விவரிக்கிறது அந்த வீடியோக்கள்.

ஸ்பெயினில் இதற்கு முன் நிகழ்ந்த பிரளயத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எஸ்டெபா கிராமமும் ஒன்றாகும். தற்போது அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த வருடத் தொடக்கத்தில் தான் ஸ்பெயினில் பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டது. தற்போது அதே போன்று பெரிய மழைப்பொழிவு நிகழ்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் இடைவிடாத மழைப்பொழிவால் ஸ்பெயினின் மற்ற நகரங்களான ஹெர்ரெரா, கோர்டோபாவும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இவ்வளவு பெரிய பேரிடருக்குக் காரணம் காலநிலை மாற்றம் தான் என ஸ்பெயின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

https://publish.twitter.com/

You'r reading 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை 20 நிமிடத்தில்.. சிதைந்த ஸ்பெயின் கிராமம்!.. திக் திக் காட்சிகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை காவலர்கள் 40 பேர் பிளாஸ்மா தானம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்