ஹெலிகாப்டரில் பறந்த பசு.. லைக்குகளை குவிக்கும் விவசாயியின் `பாசம்!

Swiss farmer uses helicopter to airlift wounded cow

பசு மாடு மீதான பாசத்தில் விவசாயி செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. இதை செய்தவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர். அவரின் பெயர் அம்ரோஸ் அர்னால்டு என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ள நிலையில் மற்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. எனினும் நெட்டிசன்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். ஆல்ப்ஸ் மலையில் 1000 பசு மாடுகள் கீழே இறங்கியபோது ஒரு பசு மாடுக்கு மட்டும் விபத்து ஏற்பட்டுவிட்டது.

இதனால் அந்த பசு மாடு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளது. பசுவை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தான் பசுவை மருத்துவமனை கொண்டு செல்ல, ஹெலிகாப்டர் வரவழைத்து கொண்டு சென்றுள்ளார். ஹெலிகாப்டர் உதவியோடு பசுவை, விவசாயி மருத்துவமனை கொண்டு செல்லும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விவசாயியை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதேநேரம் பசு தொங்கிக்கொண்டே செல்வது அதிர்ச்சியையும் பயத்தையும் உண்டாக்கி உள்ளது.

You'r reading ஹெலிகாப்டரில் பறந்த பசு.. லைக்குகளை குவிக்கும் விவசாயியின் `பாசம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தோளில் சுமந்த ஐஜி.. கலங்கிய டிஜிபி.. காவலர் சுப்பிரமணியன் இறுதிச் சடங்கு சோகம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்