முட்டையிட்ட மலைப்பாம்பு: அதில் என்ன அதிசயம்?

Egg-laying python: Whats the miracle in that?

அமெரிக்காவில் 62 வயது மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகளையிட்டுள்ளது. இப்பாம்பு ஆண் துணையின்றி முட்டைகளிட்டது அரிதானதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் மிசௌரி மாகாணத்தில் செயிண்ட் லூயிஸ் என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பந்து உடல் மலைப்பாம்பு (ball python) ஒன்று உள்ளது. கடந்த ஜூலை 23 அன்று இப்பாம்பு 7 முட்டைகளையிட்டுள்ளது. இவ்வகை பாம்பு 60 வயதை கடந்த நிலையில் முட்டையிடுவது அரிதான ஒன்று என்று உயிரியல் பூங்காவின் மேலாளர் மார்க் வானர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாம்பு ஆண் துணையின்றி முட்டையிட்டுள்ளதாகவும் ஆணின் அருகில் கடைசியாக 15 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கலவியில்லாத முறையில் இப்பாம்புகள் முட்டையிடக்கூடும். சில பெண் பாம்புகள், ஆண் பாம்பின் விந்தணுவை முட்டையிடுவதற்காக பல நாள்கள் சேகரித்து வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த 7 முட்டைகளில் 2 முட்டைகளில் உயிரற்று உள்ளன. 2 முட்டைகள் கலவி மூலம் உருவானதா என்று தெரிந்து கொள்வதற்காக மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 3 முட்டைகள் அடைகாக்க வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading முட்டையிட்ட மலைப்பாம்பு: அதில் என்ன அதிசயம்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிற்படுத்தப்பட்டோருக்கான அரசு வேலைவாய்ப்பு ! பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்