இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. அடுத்த ஊரடங்கு அமல்..

U.K. Prime Minister Boris Johnson says second wave of virus inevitable.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று 2வது அலை வீசத் தொடங்கியுள்ளது. எனவே, மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது தவிர்க்க முடியாதது என்று அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் நாடுகளில்தான் அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

இங்கிலாந்தில் இது வரை 3 லட்சத்து 86 ஆயிரம் பேருக்கு நோய் பரவியிருக்கிறது. நோய் பரவல் கடந்த 2 மாதமாகக் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. தினமும் 6 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், இங்கிலாந்தில் கொரோனா தொற்று 2வது அலையாக வீசத் தொடங்கியுள்ளது. இது அதிகமாகப் பரவலாம் என்று அச்சப்படுகிறேன்.

எனவே, மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனாலும், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த நான் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.தற்போது கொரோனா தொற்று பரவி வரும் கிழக்கு பிரிட்டனிலும், லண்டனிலும் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்த அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You'r reading இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. அடுத்த ஊரடங்கு அமல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை மண்டலத்தில் குறையாத கொரோனா.. 2 லட்சம் பேருக்கு பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்