கொரோனா நிபந்தனைகளை மீறி திருமணம் யுஏஇயில் 8 பேருக்கு சிறை !

Marriage Arrest in violation of corona conditions

கொரோனா நிபந்தனைகளை மீறி திருமணம் நடத்தியதாக கூறப்பட்ட புகாரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கொரோனா நிபந்தனைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக நெருங்கிய உறவினர்கள் உள்பட 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதை மீறினால் கைது உள்பட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அபுதாபி மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் கொரோனா நிபந்தனைகளை மீறி திருமணம் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள் அல்லாதவர்களும் கலந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த திருமணங்களில் கலந்து கொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

You'r reading கொரோனா நிபந்தனைகளை மீறி திருமணம் யுஏஇயில் 8 பேருக்கு சிறை ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டார்ட்டிங் ஓகே.. பினிஷிங் மோசம்.. மும்பையை கட்டுப்படுத்திய சென்னை பௌலர்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்