மருத்துவமனை அருகே கார் குண்டு வெடித்து 26 பேர் பலி - 18 பேர் படுகாயம்

ஆஃப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 26 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 26 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் காபூல் பல்கலைக்கழகம் மற்றும் அலி அபத் மருத்துவமனை ஆகியவற்றிற்கு அருகே அடுத்தடுத்து கார் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading மருத்துவமனை அருகே கார் குண்டு வெடித்து 26 பேர் பலி - 18 பேர் படுகாயம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரூ.824 கோடி மோசடி - கனிஷ்க் நகைக் கடை உரிமையாளர் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்