சீனாவுக்கு வரிக்கட்டும் டிரம்ப்... வெளிவந்தது குட்டு!

trump pay tax in china

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றத்தில் இருந்து அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவை எதிர்த்தைவிட சீனாவை எதிர்த்ததே அதிகம் எனலாம். 2016 ஆம் ஆண்டு சீனாவுடனான வர்த்தகத்தை துண்டித்த டிரம்ப், சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், சீனாவின் தவறுகளை முதல் ஆளாக சுட்டிக்காட்டும் நபராக இருந்து வந்துள்ளார். அடிக்கடி சீனா குறித்து கண்டன கணைகளை வீசியிருக்கிறார். சமீபத்தில் கொரோனா விஷயத்தில் டிரம்ப் சீனாவை நேரடியாகவே எதிர்த்ததை அனைவரும் கண்கூடாக பார்த்திருப்போம். இதற்கிடையே, தன்னை சீனாவுக்கு எதிரியாக காட்டிக்கொண்ட டிரம்ப்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கிக் கணக்கு மட்டுமில்லை சீனாவில் டிரம்ப் வரி கட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ட்ரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்ற கணக்கில் சீனாவுக்கு ட்ரம்ப் வரி செலுத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிரம்ப் இந்த தகவல்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, ட்ரம்ப் மாதிரியே, தற்போது அவரை எதிர்த்து போட்டியிடும், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு சொந்தமாக சீனாவில் தொழில் நிறுவனம் இருப்பதாகவும், அதன் ஆதாரம் பிடனின் மகன் ஹண்டர் பைடனின் மெயிலிலிருந்து பெறப்பட்டுள்ளது என்று ட்ரம்பின் வழக்கறிஞர் ருடி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading சீனாவுக்கு வரிக்கட்டும் டிரம்ப்... வெளிவந்தது குட்டு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல நடிகைக்கு மூன்றாவது கொரோனா டெஸ்டில் நெகடிவ்...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்