காஷ்மீர் விவகாரம்.. மீண்டும் மூக்குடைந்த இம்ரான் கான்!

saudi, iran rejects imran khan Request

ஜம்மு காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து அதனை நீக்க சர்வதேச அளவில் பல்வேறு முயற்சிகளை எடுத்து அதில் தோல்வி கண்டு வருகிறது பாகிஸ்தான். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் ஒரு முறை மூக்குடைந்துபோயிருக்கிறது பாகிஸ்தான்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யபட்டதை ஒரு கருப்பு நாள் என்று விமர்சித்து அதற்கு எதிரான நிகழ்ச்சியை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டது. அதன்படி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ஈரான் நாடுகளில் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்து வந்தது.

ஈரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகம், தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த இருந்த அதற்காக அனுமதியை கொடுக்க ஈரான் அரசு மறுத்து விட்டது. ஈரான் மட்டுமல்ல சவுதியிலும் இதே நிலைதான். ரியாத்தில், நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று 55 நாடுகளில் கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்காக பரிசுத்தொகையும் அறிவித்து இருந்தது. ஆனால் பல்வேறு நாடுகளில் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக இந்தியாவை தாக்கி பேச பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட இருந்த போதிலும், யாரும் பங்கேற்கவில்லை என்பதால் பாகிஸ்தான் மூக்குடைந்துபோயிருக்கிறது.

You'r reading காஷ்மீர் விவகாரம்.. மீண்டும் மூக்குடைந்த இம்ரான் கான்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்