எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை.. வருகிறது கொரோனா தடுப்பு மருந்து!

Pfizer COVID-19 Vaccine Is More Than 90% Effective

சென்னை உள்பட 7 மாவட்டங்களைத் தவிர கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்து 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு குறையத் தொடங்கி, அக்.12ம் தேதி 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. இதைத் தொடர்ந்து, புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து தற்போது 2 ஆயிரத்துக்கு வந்துள்ளது. நேற்று(நவ.7) 75,384 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2334 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 43,822 பேராக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2386 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 13,584 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 20 பேர் பலியானார்கள்.

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான தங்கள் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 90 சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த pfizer தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கான முதல் தடுப்பு மருந்து 90% மக்களுக்கு அந்நோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டவர்களில் யாருக்கும் இதுவரை பாதுகாப்பு பிரச்னை எழவில்லை. 6 நாடுகளில் 43,500 பேருக்கு இம்மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மருந்து விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை.. வருகிறது கொரோனா தடுப்பு மருந்து! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஜகவில் இணைய அதிரடி நடிகை திட்டம் விரைவில் முடிவு அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்